60 ஆண்டுகளாக கருவோடு வாழ்ந்த 92 வயது பெண்

சீனப் பெண் ஹுவாங் யிஜுன் என்ற 92 வயது பெண் 1948 ஆம் ஆண்டு தனது 31 வயதில் கர்ப்பமானார். அப்போது அவருக்கு கருப்பைக்கு வெளியே கரு வளர்வதாகவும், கருக்கலைப்பு செய்யுமாறும் மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால், பொருளாதாரச் சிக்கல் காரணமாக அந்த பெண் கர்ப்பத்தை சுமந்தார். சமீபத்தில், மருத்துவர்களை அவர் 92 வயதில் தொடர்பு கொண்டபோது, அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இறுதியாக அறுவை சிகிச்சை செய்து கரு அகற்றப்பட்டது. மருத்துவ வரலாற்றில் இது விசித்திரமானது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags :