மம்தா ஆட்சி நீடிக்காது - அமித்ஷா அதிரடி
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கடுமையாக சாடியுள்ளார். மேற்கு வங்கம் மாநிலத்தில் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கிய அமித்ஷா, வரும் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு 35 இடங்கள் கிடைத்தால், மம்தாவின் அரசு 2025ஆம் ஆண்டு வரை நீடிக்காது என்றார். மேலும், தனது மருமகனை முதலமைச்சர் ஆக்குவதற்கு மம்தா பானர்ஜி கனவு காணலாம், ஆனால் பாஜகவைச் சேர்ந்த ஒருவரே மேற்குவங்கத்தின் அடுத்த முதல்வர். பாஜகவால் மட்டுமே திரிணாமூல் காங்கிரஸின் ஊழலை எதிர்த்து போராடி வெல்ல முடியும் என்றார்.
Tags :



















