ஈரான் மீது அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல்

by Staff / 27-10-2023 03:14:43pm
ஈரான் மீது அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல்

சிரியாவில் உள்ள ஈரான் தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்க பாதுகாப்பு துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, படைகள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையும் அதன் துணை அமைப்புகளும் இந்த தளங்களை பயன்படுத்துவதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் தகவல் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via