மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் இன்று காலமானார்

by Admin / 19-10-2023 07:31:58pm
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் இன்று காலமானார்

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் இன்று காலமானார் .1941 வது வருடம் மார்ச் மாதம் மூன்றாம் தேதி பிறந்த அவர் 82 வயதை நிறைவு செய்த நிலையில், அவர் இன்று காலமான செய்தியை  அறிந்த பங்காரு அடிகளாரின் பக்தர்கள் மிகுந்த மன வேதனையையும் துயரத்தையும் அடைந்துள்ளனர். மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி கோவிலை நிறுவி பெண்கள் மாலை இட்டு கோவிலின் கருவறையில் அம்மனுக்கு அபிஷேக- ஆராதனைகள் செய்யலாம் என்று ஆன்மீகத்திற்கு உள்ளே ஒரு புரட்சியான நிலையை உருவாக்கியவர். அம்மா என்று அவருடைய பக்தர்களால் அழைக்கப்படுபவர். கோயில் வழியாக பெறப்பட்ட பக்தர்களுடைய காணிக்கையை கொண்டு ஆதிபராசக்தி அறக்கட்டளைஉருவாக்கிஅதன் வழியாக மருத்துவக் கல்லூரி, பொறியியற்கல்லூாி,கலை அறிவியல் கல்லூரி, செவிலியர் கல்லூரி ,மருந்து ஆளுநர் கல்லூரி, வேளாண்மை கல்லூரி என பல்வேறு கல்விக்கூடங்களை நிரூபி அதன் மூலம் கல்வி தொண்டை ஆற்றி வந்தவர் . இந்திய அரசு இவருக்கு 2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை வழங்கி இவர் தொண்டுக்காக சிறப்பு செய்தது.

 

Tags :

Share via

More stories