காதலியின் கண் முன்னே காதலன் கொலை
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கவிஞர் ஒருவர் அவரது காதலியின் கண் முன்னே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவிஞர் மற்றும் சமூக ஆர்வலரான ரியான் கார்சன் (32) என்பவர் கடந்த 2ஆம் தேதி, அதிகாலை 4 மணியளவில் தன் காதலியுடன் கிரவுன் ஹைட்ஸ் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் ரியானை குத்திக் கொலை செய்துள்ளார். ரியான் காதலி இளைஞரை தடுக்க முயன்றபோது அவரையும் குத்த முயன்றுள்ளார். இந்த காட்சிகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags :