திமுகவில் தலைவராகவோ ..முதலமைச்சராகவோ வர முடியுமா-தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி.

by Editor / 06-09-2023 09:37:29am
திமுகவில்  தலைவராகவோ ..முதலமைச்சராகவோ வர முடியுமா-தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி.

கட்சியில் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் தலைவராகவோ அல்லது முதலமைச்சராகவோ வர முடியுமா என 
துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.

பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் இன்று காலை கடற்கரை சாலையில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தை துவைக்க வைத்த பின்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்காலை சந்தித்தார்.அப்போது அவர் தெரிவித்ததாவது:

சனாதனத்திற்கு எதிராக நாங்கள் போராடியதால் தமிழிசை சௌந்தர்ராஜன் போன்றவர்கள், துணைநிலை ஆளுநராக ஆக முடிந்தது என ஆ.ராசா நேற்று பேசியதற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் நாங்கள் உழைத்து தான் மேலே வந்தோம் என்றும் சனாதனத்திற்கு எதிராக போராடுபவர்கள் அந்த கட்சியின் தலைவராக வர முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

அதேபோன்று சனாதனத்தை முழுமையாக தெரிந்து கொண்டு பேச வேண்டும் என கோரிக்கை வைத்த அவர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை பற்றி ஏதும் தெரியாமல் பேசி வருகிறார் என்றும் அவரது கட்சியில் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் தலைவராகவோ அல்லது முதலமைச்சராகவோ வர முடியுமா என கேள்வி எழுப்பினார்.

 

Tags : திமுகவில்உதயநிதி ஸ்டாலின்

Share via

More stories