சிவில் சர்வீஸ் டாப்பர்கள்...ஆளுநருடன் சந்திப்பு.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அடிப்படையில் ஐ.பி. எஸ் அதிகாரி. NSA டெபுடி டைரக்டர் உள்ளிட்ட பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்தவர். உளவுத்துறையின் தலைவராக பதவி வகித்தவர்.
தமிழக ஆளுநராக அலுவல் ரீதியாக அமர்த்தப்பட்டாலும் தமிழ்மீது அவர் கொண்ட பற்றின் காரணமாக தமிழறிஞர்களை கவுரவிப்பது, கிராமிய கலைஞர்களை ஊக்குவிப்பது, மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு உதவுவது, தமிழர் பண்டிகைகளை கொண்டாடுவது, மற்ற சமுகத்தினருடன் நட்பு பேணுவது என மண்ணின் மைந்தராக மாறிவிட்டார்.மேலும் தமிழகத்திலுள்ள பாரம்பரியமான மண்கலைப்பொருட்கள்,மரபொம்மைகள் உள்ளிட்டவைகளை வாங்கி பராமரித்துவருகிறார்.
அதன் ஒரு பகுதியாக சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தமிழ் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதை அறிந்து சிவில் சர்வீஸ் பயிலும் முதல்நிலை தேர்வு, நேர்முக தேர்வுக்கு செல்லும் மாணாக்கர்களை அழைத்து கடந்த சில ஆண்டுகளாக ஆலோசனை கொடுத்து வருகிறார்.
கடந்த ஆண்டு ஆளுநரின் ஆலோசனைப்பெற்று தேர்ச்சிப்பெற்ற சிவில் சர்வீஸ் டாப்பர்கள் சென்னை மற்றும் அருகாமை மாவட்டத்தில் உள்ள சிலர் ஆளுநரை சந்தித்து நன்றி தெரிவிக்க கேட்டுக்கொண்டதன்பேரில் ஆளுநர் இன்று சந்தித்தார், அவர்களுக்கு வாழ்த்து சொன்னார்.இந்த நிகழ்வு ஆளுநர் மாளிகையிலுள்ள அன்னபூர்ணா மண்டபத்தில் நடந்தது.
Tags : சிவில் சர்வீஸ் டாப்பர்கள்...ஆளுநருடன் சந்திப்பு.