"இந்தியாவின் கல்வி மையமாக திகழும் தமிழகம்"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் தொடர்ந்து திகழ்ந்து வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம். மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், "NIRF தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன. நமது தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முன்னணியில் இருக்கும் திராவிட மாடலுக்கு இது ஒரு பெருமையான தருணம். நான்முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற முதன்மைத் திட்டங்களால், நமது மாணவர்கள் உயர்கல்வியில் புதிய உச்சங்களைத் தொடுவார்கள்" என பதிவிட்டுள்ளார்.
Tags :