பொன்முடி வீட்டில் அமலாக்க துறையின் சோதனை....
தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி சைதாப்பேட்டை, விழுப்புரம் வீடுகளிலும் அவரது சூர்யா கல்விக் குழுமத்திலும் அவருடைய மகனும் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் கௌதம சிகாமணி வீட்டிலும் ஆறு பேர் கொண்ட அமலாக்கத் துறையினர் மத்திய பாதுகாப்பு படையின் உதவியோடு ஒன்பது இடங்களில், அதிகாலையில் இருந்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிலும் அவரது தம்பியின் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு அவரை கைது செய்து உள்ள நிலையில், மீண்டும் தமிழக அமைச்சரவையில் முக்கிய அமைச்சர்களில் ஒருவராக திகழும் பொன்முடியின் வீட்டிலும் அமலாக்க துறையின் சோதனை நடைபெறுவது தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பை உருவாக்கியுள்ளது.
Tags :