7கோடி ரூபாய் மோசடி வழக்கில் ஹரி நாடாரின் வங்கி கணக்குகளை  முடக்கம் 

by Editor / 26-05-2021 04:40:31pm
7கோடி ரூபாய் மோசடி வழக்கில் ஹரி நாடாரின் வங்கி கணக்குகளை  முடக்கம் 



கர்நாடக தொழிலதிபதிரிடம் சுமார் ஏழு கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைதான ஹரி நாடாரின் வங்கி கணக்குகளை பெங்களூர் போலீசார் முடக்கி உள்ளனர்.
பெங்களூருவை சேர்ந்த வெங்கட் ரமணி என்ற தொழிலதிபரிடம் சுமார் 7 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், கர்நாடக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.அப்போது அவரிடமிருந்த தங்கம், ரொக்கம் மற்றும் சொகுசு கார்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது .
இந்த நிலையில், ஹரி நாடார் மற்றும் அவருடன் தொடர்பு உடையவர்களின் 10-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை பெங்களூரு போலீசார் முடக்கியுள்ளது.மேலும், ஹரி நாடாருடன் தொடர்புடையர்களுக்கு சம்மன் அனுப்பி காவலில் எடுத்து விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்

 

Tags :

Share via

More stories