27-ம் தேதி 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

by Staff / 25-02-2025 02:13:08pm
27-ம் தேதி 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை மறுநாள் பிப்.27 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via