அரசு பள்ளிகளில் சொற்பொழிவு: தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க உத்தரவு.

by Editor / 06-09-2024 12:09:58pm
அரசு பள்ளிகளில் சொற்பொழிவு: தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க உத்தரவு.

சென்னையில் அரசு பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு அளித்துள்ளார். மகாவிஷ்ணு என்பவர் 2 அரசு பள்ளிகளில் தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற தலைப்பில், முழுக்க முழுக்க ஆன்மிக சொற்பொழிவை நிகழ்த்தினார். சைதாப்பேட்டை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம், அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் மோட்டிவேஷ்னல் பேச்சு என்ற பெயரில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், சென்னையில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பத்மஸ்ரீ மகா விஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சென்னை அசோக் நகரில் இயங்கி வரும் அரசு மகளிர் பள்ளியில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வுக்கு தற்பொழுது கடுமையாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

இந்நிலையில் அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி சர்சையான நிலையில் அரசு பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரத்தில் தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு அளித்துள்ளார். அரசு அனுமதி இல்லாமல் இனி எந்த நிகழ்ச்சிகளும் பள்ளிகளில் நடைபெறக் கூடாது. கல்விக்கு சம்பந்தமில்லாத எந்த நிகழ்ச்சிகளும் பள்ளிகளில் நடைபெறக் கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

 

Tags : அரசு பள்ளிகளில் சொற்பொழிவு: தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க உத்தரவு.

Share via