அதிமுக - தேமுதிக நாளை மீண்டும் பேச்சுவார்த்தை?

2024 மக்களவை தேர்தலையொட்டி தேமுதிக உடன் நாளை அதிமுக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் இரு கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நாளை மீண்டும் தொகுதிப் பங்கீடு குறித்து பேசவுள்ளனர். அதே போல் பாமக கேட்டு வரும் அதே தொகுதிகளை தேமுதிகவும் கேட்டு வருவதால் இதில் உடன்பாடு எட்டப்படவில்லை என தெரிகிறது. பாமகவுக்கு 7 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 3 தொகுதிகள் வரை கொடுக்க அதிமுக சம்மதம் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியுடன் கூட்டணியை இன்று அதிமுக உறுதி செய்துள்ளது.
Tags :