டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமான போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

by Admin / 01-01-2026 01:33:32pm
டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமான போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரம் படி 150 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 250 க்கு மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயங்குகின்றன. ஓடு பாதையில் பார்வை திறன் மிகக் குறைவாக இருப்பதால் சி .ஏ .டி ஐ IIIதொழில்நுட்பம் இல்லாத விமானங்கள் தர இயங்குவதிலும் புறப்படுவதிலும் சிக்கல் நீடிப்பதாக தெரிகிறது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையத்தில் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமான போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
 
Tags :

Share via