அரசு ஊழியர்- ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஆசிரியர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போனஸ் அறிவிப்பை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி சி மற்றும் டி பிரிவை சார்ந்த பணியாளர்களுக்கு 3,000 வரை போனஸ் வழங்கப்படும். ஓய்வுதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இது கடந்த ஆண்டை விட 500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கும் ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும். இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 9..90 லட்சம் பேர் பயனடைவர் . இதற்காக ,தமிழக அரசு 183.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது..
Tags :


















