தமிழகத்தில் பல்வேறு நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு.

தமிழகத்தில் பல்வேறு நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.அதன் விபரம் வ்ருமாறு:திருப்பூரில் தாராபுரம், வெள்ளகோவில் பகுதியில் 2 மேம்பாலங்களுக்கு ரூ.9.22 கோடி ஒதுக்கீடு.தேவகோட்டை - புதுக்கோட்டை சாலையில் மேம்பாலம் கட்ட ரூ.8.26 கோடி நிதி ஒதுக்கீடு.அரியலூரில் கொடுக்கூர்- காடுவெட்டி சாலையில் பாலம் அமைக்க ரூ.5.89 கோடி ஒதுக்கீடு.உப்பூர்- கோட்டையூர் சாலை, திருவாடானையில் உயர்மட்ட பாலம் அமைக்க ரூ.19.47 கோடி நிதி ஒதுக்கீடு.விருதுநகரில் முதுகளத்தூர் - வீரசோழன் சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்க ரூ.10.64 கோடி ஒதுக்கீடு- செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
Tags : தமிழகத்தில் பல்வேறு நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு