புதுச்சேரி சிறுமி கொலை - கமல்ஹாசன் கண்டனம்

by Staff / 06-03-2024 03:07:50pm
புதுச்சேரி சிறுமி கொலை - கமல்ஹாசன் கண்டனம்

புதுச்சேரி சிறுமி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 'ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் எனும் ஆழமான ஐயத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம். இந்த சீரழிவை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது.போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம். போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories