தமிழ்நாட்டில்  5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. 

by Editor / 25-10-2024 07:27:10am
தமிழ்நாட்டில்  5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. 

தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கும், தஞ்சாவூர், திருவாரூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : தமிழ்நாட்டில்  5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. 

Share via