ஜான்சன்&ஜான்சன் பவுடரில் புற்றுநோய் ரசாயனம்

by Staff / 21-04-2024 04:53:17pm
ஜான்சன்&ஜான்சன் பவுடரில் புற்றுநோய் ரசாயனம்

ஜான்சன்&ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடர் பயன்படுத்தியதால் புற்றுநோய் ஏற்பட்டதாக அமெரிக்காவில் 22 வழக்குகள் தொடரப்பட்டன. அதில் ஒரு வழக்காக புற்றுநோயில் இறந்த பெண்ணின் வழக்கு விசாரணையில், டால்கம் அடிப்படையிலான பவுடரில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனப் பொருட்கள் கலந்திருப்பதை அறிந்து விற்றதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு 45 மில்லியன் டாலர்( ரூ.375 கோடி) நஷ்டஈடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில் அந்நிறுவன பொருள்களின் மீதான நம்பகத் தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.

 

Tags :

Share via