ஹோலி விடுமுறையில் அரசு மருத்துவமனை - நோயாளிகள் அவதி

by Staff / 25-03-2024 03:48:31pm
ஹோலி விடுமுறையில் அரசு மருத்துவமனை - நோயாளிகள் அவதி

மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அதிகளவு நோயாளிகள் வருவார்கள். இந்நிலையில் பல மாவட்டங்களில் இருந்து திங்கள் கிழமையான இன்று ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்தனர். ஆனால் ஹோலி பண்டிகையை முன்னிட்டு வெளிப் புற நோயாளிகள் பிரிவுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால் வெளிப்புற சிகிச்சைப் பிரிவும் மூடப்பட்டிருந்தது. இதுகுறித்து பேசிய நோயாளிகள், ஹோலி பண்டிகை பற்றி எங்களுக்குத் தெரியாது. அதற்கு இங்கு ஏன் விடுமுறை விட்டார்கள் என தெரிய வில்லை என்று தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories