விடுபட்ட தகுதி உள்ளவர்களுக்கு  மகளிர் உரிமை தொகை நிச்சயம்- கனிமொழி எம்.பி உறுதி 

by Admin / 24-10-2023 02:55:47pm
 விடுபட்ட தகுதி உள்ளவர்களுக்கு  மகளிர் உரிமை தொகை நிச்சயம்- கனிமொழி எம்.பி உறுதி 

பரிசீலனை, கள ஆய்வு என குறுஞ்செய்தி வந்தவர்கள் என விடுபட்ட தகுதி உள்ளவர்களுக்கு  மகளிர் உரிமை தொகை நிச்சயம் கிடைக்கும் என  கனிமொழி எம்.பி உறுதி. 

தூத்துக்குடி மாவட்ட கயத்தார் ஒன்றியத்திற்கு உட்பட்ட மானங்காத்தான் கிராமத்தில் 80 லட்சம் மதிப்பீட்டில் முதற்கட்டமாக கட்டப்பட்ட 9 வீடுகள் திறப்பு விழா - கனிமொழி எம்.பி அமைச்சர் கீதாஜீவன் ,மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்று திறந்து வைத்தனர்.

மேலும் கயத்தாறு ஊராட்சி ஒன்றியம், தெற்கு இலந்தைக்குளம் ஊராட்சிக்குட்பட்ட மானங்காத்தான்  கிராமத்தில் உள்ள 50 மேற்பட்ட ஆதி திராவிடர் நல குடியிருப்புகள் இருந்து வருகின்றன இக் குடியிருப்புகளில் 20 பழுதடைந்து விட்டதால் புதிய வீடுகள் கட்டி தரும்படி தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பியிடம்  கோரிக்கை வைக்கபட்டது..அவர்களது கோரிக்கையை ஏற்று எம்.பியின் முயற்சியால் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் பழுதடைந்த 20 காலனி வீடுகளை இடித்து, புதிய வீடுகள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில்  தற்போது, இதில் கட்டுமானப் பணிகள் முடிவுற்ற 9 வீடுகளை ( 4 லட்சம் மதிப்பீட்டில்) கனிமொழி எம்.பி மற்றும்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாவட்ட ஆட்சித் தலைவர், லட்சுமிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு   பயனாளிகளின் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தனர்..

.இதனை தொடர்ந்து நிகழ்வில் பேசிய எம்.பி கனிமொழிசாலை வசதி,மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்ட கோரிக்கை யெல்லாம் நிறைவேற்றி வருகிறோம்மகளிர் உரிமை தொகை திட்டத்தை நிறைவேற்றி உள்ளோம்,இத்திட்டத்தில் பதிவேற்றத்தின் போது சிறு சிறு தவறுகள் நடைபெற்று உள்ளது .அவற்றை கண்டறிந்து உரிய பயனாளி களுக்கு அத் தொகை கிடைக்க பெறும்பரிசீலனை, கள ஆய்வு என குறுஞ்செய்தி வந்தவர்கள் என விடுபட்ட தகுதி உள்ளவர்களுக்கு  மகளிர் உரிமை தொகை நிச்சயம் கிடைக்கும்.

கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டத்தின் கீழ் 1000. ரூபாய் வழங்கபட்டு வருகிறது எனவே அவர்களை மேற்படிப்பு படிக்க வையுங்கள்.பெண்கள் தங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற கலைஞரின் கனவை நினவாக்க வேண்டும்...

.இந்நிகழ்வில் கயத்தாறு வட்டாட்சியர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவர் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

 

 விடுபட்ட தகுதி உள்ளவர்களுக்கு  மகளிர் உரிமை தொகை நிச்சயம்- கனிமொழி எம்.பி உறுதி 
 

Tags :

Share via