விதியை மீறிய பயணம்.. 3 இளைஞர்கள் பரிதாப பலி
திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த வினோத் (19), ராம் (20) ஆனந்த் (22) ஆகிய மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு நேரத்தில் பெரம்பலூர் நோக்கி பயணம் செய்துள்ளனர். அப்போது எதிரே வந்த கியாஸ் சிலிண்டர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராம், வினோத் மற்றும் ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :



















