மதுரை மத்திய சிறையில் போலீசார் சோதனை

by Editor / 31-12-2022 08:58:17am
மதுரை மத்திய சிறையில் போலீசார் சோதனை

மதுரை மத்திய சிறையில் 1500-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். 
இந்தநிலையில், கைதிகளிடம் செல்போன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பழக்கம் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து மதுரை மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட முடிவு செய்தனர். மதுரை மத்திய சிறையில்  சிறைத்துறை எஸ்.பி. வசந்த கண்ணன் தலைமையில் 3 காவல் உதவி ஆணையர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தனித்தனி குழுவாக பிரிந்து சென்று ஒவ்வொரு அறைகளில் உள்ள கைதிகளிடம் சோதனையில் ஈடுபட்டனர். இதுபோல், அங்குள்ள சமையல் அறை, குளியல் அறை உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்தது. நேற்று சில கைதிகள் மறைத்து வைத்திருந்த கஞ்சா உள்ளிட்ட போதைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

Tags :

Share via

More stories

Logo