பொன்முடி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா..?

by Editor / 20-12-2023 10:42:13pm
பொன்முடி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா..?

தமிழகத்தில் கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில்  உயர்கல்வித்துறை மற்றும் கனிமவள அமைச்சராக பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.75 கோடி சொத்து சேர்த்ததாக  அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதும் வழக்கு தொடரப்பட்டது. 2016ஆம் ஆண்டு விசாரிக்கப்பட்ட வழக்கில் ஆதாரம் இல்லை என இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

 இதை எதிர்த்து கடந்த 2017ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது பொன்முடி தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை சாட்சியங்களில் உண்மைத்தன்மை இல்லை என்றும், மனைவியின் வருமானத்தை என்னுடைய வருமானமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கணக்கிட்டுள்ளதாகவும் பொன்முடி தரப்பில் வாதிடப்பட்டது.

 அனைத்த தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 64.90 சதவீதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணம் ஆகியுள்ளதால் அமைச்சர் பொன்முடியை  குற்றவாளி என்று கூறியதை அடுத்து விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழக்கிய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. 

வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு 2வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.  அவருக்கான தண்டனை விவரங்கள்  நாளை காலை 10:30க்குஅறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், அமைச்சர் பொன்முடி தனது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுகி இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை வாங்கி பதவி தக்க வைக்க முடியுமா என்பது குறித்து சட்டவல்லுநர்களுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

 

 

Tags : பொன்முடி அமைச்சர் பதவி

Share via