பாராளுமன்றத்தேர்தல் வியூகம் குறித்து விரைவில் தெரிவிப்பேன்  டிடிவி தினகரன் பேட்டி.

by Editor / 20-12-2023 10:53:53pm
பாராளுமன்றத்தேர்தல் வியூகம் குறித்து விரைவில் தெரிவிப்பேன்  டிடிவி தினகரன் பேட்டி.

  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டி எஸ்கே செல்வம் தந்தை உயிரிழந்தார் அவரின் உடலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவர் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

 அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறுகையில் 
 அமைச்சர் பொன்முடி வழக்கு குறித்த கேள்விக்கு தீர்ப்பு தற்பொழுது வந்துள்ளது தண்டனை இதுவரை அறிவிக்கப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை இருந்தால் தான் தகுதி நீக்கம் போன்ற நடவடிக்கைகள் பாயும் தற்போது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது தண்டனை விவரங்கள் இன்னும் வரவில்லை அதன் பிறகு தான் அவர்கள் முடிவு செய்பவர்கள் என்று பேசினார் 

தென் மாவட்டங்களில் மழை பாதிப்பு அதிக அளவில் உள்ளது. எதிர்பாராத வரலாறு காணாத மழை பெய்துள்ளது அங்கு மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் அரசு பணிகளை துரிதப்படுத்தி மக்களை பாதுகாக்க வேண்டும் என்றார் தற்பொழுது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக தென் மாவட்டத்தில் செல்வேன் என்று கூறினார்

 நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய அரசு சஸ்பெண்ட் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்றார் 

சேலம் மாடர்ன் தியேட்டர் விவகாரத்தில் உரிமையாளருக்கு எந்த ஒரு அச்சுறுத்தல் இல்லாமல் அரசு பாதுகாக்க வேண்டும் அப்படி எதிர்ப்பை மீறி சிலை அமைத்தால் மக்களை அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அமைச்சர் கூறிய கருத்தை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன் அதன் உரிமையாளருக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அரசாங்கம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார் 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் வியூகத்தை டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி தொடக்கத்தில்  நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றார்.

 

Tags : பாராளுமன்றத்தேர்தல் வியூகம் குறித்து விரைவில் தெரிவிப்பேன்  டிடிவி தினகரன் பேட்டி.

Share via

More stories

Logo