தந்தையை கொலை செய்த மகன் கைது

by Staff / 17-11-2023 05:25:33pm
தந்தையை கொலை செய்த மகன் கைது

தூத்துக்குடி மையவாடியில் வெட்டி கொலை செய்யப்பட்டவர் ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்த சின்னத்துரை (36) கொத்தனார் வேலை செய்துவரும் இருவருக்கும் இவரது மனைவி ராஜேஸ்வரிக்கும் இடையே நடந்த குடும்ப தகராறு காரணமாக மனைவி தனது பிள்ளைகளை அழைத்துகொண்டு தனது தாய் வீடு இருக்ககூடிய முத்தையாபுரம் பகுதிக்கு கடந்த தீபாவளி அன்று வந்துள்ளார் நேற்று குடிபோதையில் அங்கு வந்த சின்னத்துரை தனது மனைவி பிள்ளைகளை தனது வீட்டுக்கு வரும்படி கூறி தகராறு செய்துள்ளார் இதனால் கடுமையான சண்டை வந்துள்ளது தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு தூத்துக்குடி மையவாடி வந்த சின்னத்துரை அங்கு வைத்து மது அருந்தி கொண்டு இருந்துள்ளார் அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த அவரது மூத்த மகன் குடித்துவிட்டு பிரச்சனை செய்ததை கண்டித்துள்ளார் இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட தான் கையில் கொண்டு வந்த அரிவாளால் தந்தை சின்னத்துரை-யை வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார் இந்த சம்பவம் தொடர்பாக பதுங்கி இருந்த சிறாரை தென்பாகம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்

 

Tags :

Share via

More stories

Logo