திருச்செந்தூர்: 200 பேர் கைது

by Staff / 17-11-2023 05:23:23pm
திருச்செந்தூர்: 200 பேர் கைது

திருச்செந்தூர் கோவிலில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் விபி ஜெயக்குமார், மாநில பொதுச் செயலாளர் அரசு ராஜா, மாநில செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேல், கோட்டச் செயலாளர் ஆறுமுகசாமி, கோட்ட தலைவர் தங்க மனோகர் உட்பட பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆயிரம் இரண்டாயிரம் மூவாயிரம் என கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்த கோரி கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கைது செய்தனர். அவர்கள் திருச்செந்தூர் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக பக்தர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் திருச்செந்தூர் கிழக்கு பிரகாரம் போர்க்களம் போல் ஆனது.

 

Tags :

Share via

More stories