இஸ்ரேல் லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது.
அமெரிக்கா தற்காலிக போர் நிறுத்தத்தை ஈரானுக்கு அறிவித்திருந்தாலும் இஸ்ரேல் லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இதற்கு இஸ்ரேல் பிரதமர் போர் நிறுத்தத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்துள்ளார். போர் நிறுத்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே இஸ்ரேல்- லெபனானின் பல்வேறு பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட வான் வான்வெளி தாக்குதல்களை நடத்தியது. குறிப்பாக, பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனான் பகுதியில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் முன்னோர்க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் 1150 க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் லெபனான் அறிவித்துள்ளது .உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனானும் உள்ளடங்கும் என்று ஈரானும் பேச்சு வார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்த பாகிஸ்தான் நாடுகளும் கூறும் நிலையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் லெபனான் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை என்று மறுக்கின்றன. இருப்பினும், லெவனன் எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க வாசிங்டனில் இஸ்ரேல் மற்றும் லெபனான் தூதர்கள் பங்கேற்கும் நேரடி பேச்சு வார்த்தையில் இது முடிவுக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது உள்ள சூழ்நிலையில் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டாலும் ஹிஸ்புல்லா அமைப்பை குறி வைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நிகழ்த்தி வருகிறது.
Tags :











.jpg)






