தமிழகம் முழுவதும் பல இடங்களிலும்செயற்கை கருத்தரிப்பு மையம் அமைப்பதற்கு முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆயிங்குடி கிராமத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ரூ.3 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் 7 துணை சுகாதார நிலைய கட்டிடங்களையும் 4 ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்களையும் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் முன்னிலையில் திறந்து வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.அவர் பேசியதாவது:
தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சரின் உத்தரவுப்படி துணை சுகாதார நிலையம் ஆரம்ப சுகாதார நிலையம் சீரமைக்கப்பட்டு வருகிறது .
சுகாதார நிலையங்களில் மருத்துவமனை நேரம் தவிர்த்து தொலைபேசி மூலம் அழைத்தால் டாக்டர் வந்து சிகிச்சை அளிப்பார்கள்.
தற்போது அரசு மருத்துவமனையை குறை கூறுவது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக தமிழகம் முழுவதும் பாம்பு கடி நாய்க்கடி ஆகிய வற்றிற்கு தேவையான மருந்து தற்பொழுது இருப்பில் உள்ளது. குறிப்பாக துணை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட மருந்து இருக்கிறது. விஷம் தீண்டி காலம் கடந்து மருத்துவமனைக்கு வந்தால் காப்பாற்றுவது சிரமம். அதன் பின் அரசு மருத்துவமனைக்கு வந்து அந்த நேரத்தில் மருத்துவமனையை குறை சொல்கிறார்கள்.
புதுக்கோட்டை பல் மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். தற்பொழுது அறந்தாங்கி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு பணிகள் பல கோடியில் நடந்து வருகிறது.
அவ்வாறு பணிகள் முடியும் பட்சத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து ஏற்பட்டு அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு விபத்து சிகிச்சைக்கான தனிப்பிரிவு அமைக்கப்படும் அதில் அதில் விபத்தில் சிக்கியவர்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். செயற்கை கருத்தரித்தலுக்கு ஒரு நோயாளிக்கு பல லட்சம் செலவாகிறது. தற்பொழுது தனியார் மருத்துவமனைகள் இது போன்ற சிகிச்சை அளித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது முதன் முதலாக எழும்பூரில் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை செய்யப்படுகிறது
தமிழகம் முழுவதும் பல இடங்களிலும் புதுக்கோட்டையிலும் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைப்பதற்கு முதல்வர் ஏற்பாடு செய்வார் .108 ஆம்புலன்ஸ் சேவைகள் குறித்து பல தகவல் வருகிறது இது ஒரு தனியார் அமைப்பு இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்
Tags : தமிழகம் முழுவதும் பல இடங்களிலும்செயற்கை கருத்தரிப்பு மையம் அமைப்பதற்கு முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.