குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான அனுமதி.

by Editor / 06-08-2024 09:00:48am
குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான அனுமதி.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் சுற்றுலாவாசிகள் அருவியில் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று காலை முதல் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு சீரானதை அடுத்து மீண்டும் குளிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அவ்வப்போது பெய்யும் லேசான சாரல் மழையுடன் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags : குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான அனுமதி.

Share via

More stories

Logo