தூத்துக்குடிக்கு வார இறுதி நாள் விடுமுறை சிறப்பு ரயில்

by Staff / 19-04-2024 01:02:45pm
தூத்துக்குடிக்கு வார இறுதி நாள் விடுமுறை சிறப்பு ரயில்

வார இறுதி நாள் விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை - தூத்துக்குடி இடையே  சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.  அதன்படி  டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்  - தூத்துக்குடி சிறப்பு ரயில் ஏப்ரல் 19 அன்று  சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு தூத்துக்குடி சென்று சேரும்.  இந்த ரயில்கள் சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி  ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன வசதி இருக்கை வசதி பெட்டி ஒரு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டி, 20 இரண்டாம் வகுப்பு பொது வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும். ‌

 

Tags :

Share via