நடிகர் விஜய் வாக்களித்தார்

by Staff / 19-04-2024 12:58:52pm
நடிகர் விஜய் வாக்களித்தார்

நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் சற்றுமுன் வாக்களித்தார். கடந்த முறை சைக்கிளில் வந்து வாக்களித்த விஜய், இந்த முறை நீலாங்கரை வீட்டில் இருந்து வாக்குச்சாவடி மையத்திற்கு காரில் வந்து இறங்கினார். கூட்டம் காரணமாக விஜய் வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று தனது வாக்கினை செலுத்தினார். கட்சி தொடங்கிய பின்னர் விஜய் முதல் முறையாக வாக்களித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories