வேங்கைவயலில் கருப்புத் துணி கட்டி போராட்டம்

by Staff / 19-04-2024 12:55:58pm
வேங்கைவயலில் கருப்புத் துணி கட்டி போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாயில் கருப்புத் துணி கட்டி தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியிலுள்ள வாக்குச்சாவடியில் இதுவரை இரு வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அதில் ஒருவர் வாக்குச்சாவடி பணியாளர், வாக்குச்சாவடி பணிச் சான்றிதழ் (இடிசி) வைத்து வாக்களித்தவர் ஆவார். மற்றொருவர் முத்துக்காடு பகுதியிலிருந்து புதிதாக இங்கு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்.

 

Tags :

Share via

More stories

Logo