விவசாய நிலங்களுக்கு ஆபத்து - அன்புமணி ராமதாஸ்
திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவுசார் நகரம் அமைக்க, விவசாய நிலங்களை கையகப்படுத்தும் தமிழக அரசின் முடிவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், அறிவுசார் நகரம் திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்த முயன்றால் போராட்டம் வெடிக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார். மேலும், இது குறித்து பேசிய அவர், திருவள்ளூர், ஊத்துக்கோட்டையில் 1,703 ஏக்கரில் உலகளாவிய பங்களிப்புடன் அறிவுசார் நகரம் அமைக்கும் பணி தொடங்க உள்ளது. இத்திட்டத்திற்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்த அரசு துடிப்பது நியாயமல்ல என விமர்சனம் செய்துள்ளார்.
Tags :













.jpg)





