விசாகபட்டினம்- விரைவு ரயிலில் தீ விபத்து

by Editor / 04-08-2024 12:47:59pm
விசாகபட்டினம்- விரைவு ரயிலில் தீ விபத்து

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் கோர்பா - விசாகா விரைவு ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஆகஸ்ட் 04 காலை கோர்பாவில் இருந்து விசாகாபட்டினம் ரயில் நிலையத்தை வந்தடைந்த ரயில், நான்காம் எண் நடைமேடையில் இருந்தபோது திடிரென தீ விபத்து ஏற்பட்டது. ரயில்வே ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் பி6, பி7, எம்1 ஆகிய பெட்டிகள் முற்றிலும் எரிந்து நாசமானது. நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
 

 

Tags :

Share via

More stories

Logo