சுடுகாட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 17வயது கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் கைது.

by Editor / 25-04-2025 11:52:17pm
சுடுகாட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 17வயது கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் கைது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது கிராமம் சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தனி பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் அங்கு சென்றுள்ளனர். போலீசார் சென்றதும் சுடுகாட்டு பகுதியில் நின்றிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். போலீசார் சுற்றி வளைத்து மூன்று பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சுடுகாட்டுப் பகுதியில் விற்பனைக்காக  கஞ்சாவை பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இதனை கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக கோவில்பட்டி காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர பாண்டி (32), கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி (33( மற்றும் 17 வயது கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 11 கிலோ கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து வந்தது? தப்பி ஓடியவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : சுடுகாட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 17வயது கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் கைது.

Share via