லஞ்சம் வாங்கிய உதவி ஆணையர் கைது

கோவையில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த லஞ்சம் கேட்ட அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா, கைது செய்யப்பட்டார். தனியார் கோயில் வருவாய் பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை எடுக்க ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக ரூ.1 லட்சம் பெறும் போது, இந்திரா கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கினார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags :