போதைப் பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த கணவன்
போதைப் பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த கணவன். தான் மட்டுமின்றி தனக்கு தெரிந்தவர்களுக்கும் தம் மனைவியை இறையாக்கிய காமக்கொடூரன் 72 வயதான பெலிக் காட்இவனுக்கு எதிராக அவனது மனைவிக்கு செல் பெலிகாட்டுக்கு ஆதரவாக சனிக்கிழமை அன்று பிரான்ஸ் முழுவதிலும் உள்ள நகரங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர் .இச்சம்பவம் பிரான்சை அதிர்ச்சிக்கி உள்ளாக்கியது. அத்துடன் மார்க் இலிருந்து பாரீஸ்வரையிலான நகரங்களில் 30 பெண்ணிய சங்கங்கள் கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன .அங்கு இருந்தவர்களின் கைகளில் செல்லுக்கு ஆதரவான பதாகைகள் இருந்தன. பாதிக்கப்பட்டவர்களை நம்புகிறோம் என்று எழுதப்பட்ட வாசகங்கள் அதில் இருந்தன. பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் போதை பொருளால் தூண்டப்பட்டது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேரணி அமைந்தது. இப்பிரச்சனை வழக்கு விசாரணை தொடங்கி பிரான்சின் அசாதாரமான ஒரு நிகழ்வாக பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது..
Tags :