இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி, செவிலியர் பலி. 

by Editor / 01-10-2024 11:05:35am
 இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி, செவிலியர் பலி. 

திண்டுக்கல், கோவிலூரை அடுத்த தங்கச்சியம்மாப்பட்டியைச் சோ்ந்த உமாமகேஷ்வரி (44). இவா், கரிக்காலி சிமென்ட் ஆலையிலுள்ள முதலுதவி சிகிச்சை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில் பணிக்குச் சென்றுவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது குஜிலியம்பாறை கடை வீதியில் பின்னால் வந்த லாரி இவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த உமா மகேஷ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து குஜிலியம்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 

Tags : இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி, செவிலியர் பலி. 

Share via

More stories

Logo