சமூக நீதி குறித்து பேச தகுதி உள்ளதா - ராமதாசு கேள்வி

by Staff / 20-02-2024 11:39:23am
சமூக நீதி குறித்து பேச தகுதி உள்ளதா - ராமதாசு  கேள்வி

பாமக தலைவர் ராமதாஸ் தனது எக்ஸ் பதிவில், உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட மராத்தா இட ஒதுக்கீட்டை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையுடன் மீண்டும் கொண்டு வருகிறது மராட்டிய அரசு. அதற்காக அம்மாநில சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று கூட்டப்பட்டு, இட ஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்படுகிறது. இது தான் சமூகநீதி. ஆனால், உச்சநீதிமன்றமே வழங்க வலியுறுத்தியும் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டை வழங்க மறுக்கிறது தமிழக அரசு; கடமையை செய்யத் தவறுகிறது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம். இங்குள்ளவர்களுக்கு சமூகநீதி குறித்து பேச தகுதி உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo