பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விமானப்படை அலுவலர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இந்திய விமானப்படை அலுவலர் ஒருவரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விமானப்படையின் ஆவன அலுவலகத்தில் பணியாற்றும் தேவேந்திர சார்மாவை சமூகவலைதளத்தில் ஒரு பெண் மூலம் ஐஎஸ் ஐ அமைப்பு பொறியில் சிக்கி வைத்து அவரிடமிருந்து விமானப்படையின் ரகசிய தகவல்களை பெற்றதாகவும் கூறப்படுகிறது. மனைவியின் வங்கி கணக்கில் சந்தேகப்படும்படியான பணப்பரிமாற்றங்கள் உள்ளதையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து மே 6-ஆம் நாள் அவரை கைது செய்து டெல்லி காவல் நிலைய காவல் துறையினர் அலுவலக ரகசிய காப்பு சட்டப்படி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags :