நிலவில் இருந்து எடுத்து வரப்பட்ட மண்ணில் தாவரங்களை வளர்த்துள்ளனர் விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சந்திர மண்ணில் தாவரங்களை வெற்றிகரமாக வளர வைக்க முடியும் என்பதைக் நிரூபித்துள்ளனர். சந்திரனுக்கு அப்பல்லோ 11, 12 மற்றும் 17 திட்டங்களின் விண்வெளி வீரர்கள் சந்திரன் சென்று திரும்பும்போது எடுத்துவரப்பட்ட மண்ணில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிலவில் அல்லது எதிர்காலத்தில் விண்வெளிப் பயணங்களின் போது விண்வெளி வீரர்களுக்கான உணவு மற்றும் ஆக்ஸிஜனுக்காக தேவைப்படும் தாவரங்களை வளர்ப்பதற்கான முதல் படிதான் இந்த ஆராய்ச்சி.
இதுதொடர்பாக கடந்த 12ம் தேதி கம்யூனிகேஷன்ஸ் பயாலஜி என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில், “பூமியில் காணப்படும் வழக்கமான மண்ணிலிருந்து முற்றிலும் வேறுபட்ட சந்திரன் ரெகோலித் என்று அழைக்கப்படும் சந்திரனின் மண்ணுக்கு தாவரங்கள் எவ்வாறு உயிரியல் ரீதியாக பதிலளிக்கின்றன” என்பதையும் கூறியிருக்கிறார்கள்.
ஆய்வு குறித்து ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பேராசிரியர் அண்ணா-லிசா பால் கூறுகையில், நிலவில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் மாதிரிகள், நோய்க்கிருமிகள் அல்லது பூமியின் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் பிற அறியப்படாத கூறுகளைக் கொண்டிருக்கவில்லை என்பதை நிறுவ தாவரங்கள் உதவியது என்றார்.
Tags :