மம்தா பானர்ஜி டெல்லியில் நடைபெற்று வரும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார்.

by Admin / 27-07-2024 09:04:44pm
மம்தா பானர்ஜி டெல்லியில் நடைபெற்று வரும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் நடைபெற்று வரும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார். கூட்டத்தை புறக்கணித்து வெளியேறுவதற்கான காரணமாக அவர் சந்திரபாபு நாயுடு பேசுவதற்கு 20 நிமிடங்கள் வழங்கப்பட்டதாகவும் அசாம் கோவா சத்தீஸ்கர் முதல்வர்கள் 10 அல்லது 12 நிமிடங்கள் பேசியதாகவும் தன்னை ஐந்து நிமிடங்களுக்குள் கூட பேச விடாமல் தடுத்ததின் காரணமாக தம் வெளியேறியதாகவும் எதிர்க்கட்சியில் இருந்து தான் மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாகவும் கூட்டுறவு- கூட்டாட்சியை பலப்படுத்த வேண்டும் என்று ஆர்வத்தின் காரணமாக இந்த கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாகவும் அதிகாரங்கள் நிதி அதிகாரங்களை வழங்குவது அல்லது திட்ட கமிஷனை மீண்டும் கொண்டு வருவது எப்படி என்று நடந்த இந்த கூட்டத்தில் தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்று வெளியேறியதாக கூறினார்.

 

Tags :

Share via