செங்கோட்டை - புனலூர் ரயில் பாதையில் மின்சார இன்ஜின் மூலம் ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு...

செங்கோட்டை - புனலூர் ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணி நிறைவுற்ற நிலையில் மின்சார ரயில் இன்ஜின் மூலம் அதிவேகமாக ரயில்கள் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த வழித்தடத்தில் மின்சார இன்ஜின் மூலம் ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, இன்று புறப்படும் (27.07.2024) ரயில் எண். 16791, திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படும். ரயில் எண். 16792, பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் நாளை முதல் (28.07.2024) மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படும்.
ரயில் எண். 16102, கொல்லம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை முதல் (28.07.2024) மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படும். ரயில் எண். 16101, சென்னை எழும்பூர் - கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை மறுநாள் முதல் (29.07.2024) மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படும்.
ரயில் எண். 16327, மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை முதல் (28.07.2024) மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படும். ரயில் எண். 16328, குருவாயூர் - மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் நாளை மறுநாள் முதல் (29.07.2024) மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படும்.
மேலும், காலை 7 மணிக்கு புறப்படும், ரயில் எண். 06685, திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் ரயிலும், மாலை 06686, செங்கோட்டை - திருநெல்வேலி பயணிகள் ரயிலும் நாளை முதல் (28.07.2024) மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படும், என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் எண். 16361/16362, எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில்கள் காரைக்குடி - திருவாரூர் ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணி நிறைவு பெற்ற பிறகு மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படும்.
Tags : செங்கோட்டை - புனலூர் ரயில் பாதையில் மின்சார இன்ஜின் மூலம் ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு...