பண மோசடி செய்த் அதிமுக பிரமுகர்  வீட்டை  சூறையாடிய பெண்கள் 

by Editor / 05-07-2021 05:07:23pm
பண மோசடி செய்த் அதிமுக பிரமுகர்  வீட்டை  சூறையாடிய பெண்கள் 


அதிமுக வட்ட பிரதிநிதியின் வீட்டினை பெண்கள் முற்றுகையிட்டு சூறையாடிய சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியை சார்ந்தவர் ராஜேந்திரன். இவர் அதிமுக வட்ட பிரதிநிதியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அங்குள்ள தொட்டிக்குப்பம் பகுதியை சார்ந்த மீனவ மக்களிடம் குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஏற்பாடு செய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்காக பணமும் அவர்களிடம் வசூல் செய்யப்பட்ட நிலையில், மொத்தமாக சுமார் 46 பேரிடம் பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. வீடு தற்போது வரை ஏற்பாடு செய்து கொடுக்காத நிலையில், இதனால் பெண்கள் மிகுந்த ஆத்திரத்துக்கு உள்ளாகியுள்ளனர். 
இதனையடுத்து, சம்பவத்தன்று ராஜேந்திரன் வீட்டில் இல்லாத சமயத்தில் அங்கு மொத்தமாக திறந்து வந்த பெண்கள், அவரது வீட்டின் முன்புறம் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் மற்றும் சி.சி.டி.வி கேமிராக்களை கற்களால் அடித்து நொறுக்கி சூறையாடி சென்றனர்.
தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தியதாகவும், இது தொடர்பாக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது..

 

Tags :

Share via

More stories

Logo