மேகதாது விவகாரம் தமிழக முதல்வருக்கு எடியூரப்பா கடிதம்
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கர்நாடக மாநில முதல்வர் கடிதம் எழுதியிருக்கிறார்.
தமிழக - கர்நாடக எல்லைப்பகுதியில் உள்ள மேகதாது என்ற மேகேதாட்டு பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட பல வருடமாக முயற்சித்து வரும் நிலையில், தற்போது அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து சட்டரீதியான நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு, கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில், மேகதாது அணைகட்ட தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என கர்நாடக முதல்வர் தமிழக முதல்வருக்கு வலியுறுத்தி இருக்கிறார்.
மேலும், கர்நாடக மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு மேகதாது அணை கட்டப்படவுள்ளது. கர்நாடக மக்களின் நீர்த்தேவையை கருத்தில் கொண்டு தமிழக அரசு மேகதாது அணைகட்ட எதிர்ப்பு தெரிவிக்க கூடாது. மேகதாது அணை மூலமாக தமிழக மக்களுக்கும் பலன் கிடைக்கும்.
மேகதாது அணையால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இரண்டு மாநில எல்லைப்பகுதியில் உள்ள காவேரி ஆற்றில் தமிழக அரசும் தன்னிச்சையாக நீர்மின்சார திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது " என்று தெரிவித்துள்ளார்.
Tags :