வேளாண் பட்ஜெட் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை

by Editor / 07-08-2021 08:46:41am
வேளாண் பட்ஜெட் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை

தமிழக அரசின், 2021 - 2022ம் ஆண்டுக்கான பட்ஜெட், வரும், 13ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், பட்ஜெட் தொடர்பாக, ஒவ்வொரு துறையினருடனும், நிதி அமைச்சர் தியாகராஜன் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், தியாகராஜன், நாசர் ஆகியோர் பங்கேற்றனர். கால்நடை, மீன்வளம், பால்வளத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அந்த துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.அதேபோல, வேளாண் பட்ஜெட் தொடர்பாக, விவசாய அமைப்புகளுடன், ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், தியாகராஜன், வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo