டெல்லியில் மீண்டும் கடுமையான காற்று மாசு
தலைநகர் டெல்லியில் மீண்டும் காற்று மாசு அதிகரித்து வருகிறது. புதன்கிழமை, நகரம் கடுமையான மாசு நிறைந்த புகை மூட்டத்தில் மூழ்கியது. காலை 8 மணியளவில் காற்றின் தரக் குறியீடு (AQI) 392ஐ எட்டியது. ஆர்.கே.புரம் (422), பஞ்சாப் பாக் (432), ஐஜிஐ விமான நிலையம் (404), துவாரகா (416), ரோஷினி (421), ஆனந்த் விஹார் (430) மற்றும் நேரு நகர் (434) என்ற அளவில் இருந்தது. இந்த காற்றை சுவாசிப்பது ஒரு நாளைக்கு 10 சிகரெட் பிடிப்பதற்கு சமம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
Tags :