ஆம்ஸ்ட்ராங் கொலை: மேலும் 10 ரவுடிகள் சிக்கியதாக தகவல்

by Staff / 20-07-2024 02:39:15pm
ஆம்ஸ்ட்ராங் கொலை: மேலும் 10 ரவுடிகள் சிக்கியதாக தகவல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 10 ரவுடிகள் போலீஸ் வளையத்தில் கொண்டு வரப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் நிர்வாகியும் வழக்கறிஞருமான மலர்க்கொடி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த எல்லப்பனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், திண்டுக்கல், மதுரையைச் சேர்ந்த சில ரவுடிகளிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

 

Tags :

Share via