ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று.

by Editor / 22-05-2024 09:25:03am
 ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (மே 22) அனுசரிக்கப்படும் நிலையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள், பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி போராட்டத்தின் நூறாவது நாளன்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்றனர். அப்போது அவர்களை தடுக்க முயன்ற போது ஏற்பட்ட வன்முறையில், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து ஆண்டுதோறும் இதே நாளில் நினைவு தினம் அனுசரித்து வருகின்றனர்.

 

Tags : ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு

Share via

More stories